நடக்கவிருக்கும் நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளிலிருந்து 115 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்- ஐக்கிய இராச்சியத்தில் 20 உறுப்பினர்கள்
LONDON , NEW YORK, UNITED STATES, March 21, 2024 /EINPresswire.com/ --எதிர்வரும் வைகாசி 5ஆம் திகதி (05/05/2024) அன்றுநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவதுஅரசவைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்யும்தேர்தல்கள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற உள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில் ஐந்து (5) தேர்தல்மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
* அண்மை காலங்களில், உலகின் பல நாடுகளின்பாராளுமன்றங்களில் பெண்கள், இளையோருக்கானஆசனங்கள் அதிகரிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருவதனை பல நாடுகளிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலிலும்பெண்கள், இளையோரின் பங்களிப்பினைஊக்குவிப்பதற்காக பெண்களுக்கு குறைந்தபட்சம் 25 வீதம்(25%) ஆசனங்களும், இளையோருக்கு 25 வீதம் (25ம%) ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகபிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த அல்லது சிறு வயதிலேயேபிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இளையோரின்பங்களிப்பினை மிகவும் வரவேற்கிறோம்.
** ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) 5 தேர்தல் மாவட்டங்கள்பின்வருமாறு. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்து நான்கு(4) பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்
1) தேர்தல் மாவட்டம் 1: லண்டன் - வடமேற்கு (NW LONDON):
இந்த தேர்தல் மாவட்டம் HARROW, BRENT, EALING, BARNET, WESTMINISTER, HOUNSLOW, HILLINGTON நகராட்சிகளை (Councils) உள்ளடக்கும்.
2) தேர்தல் மாவட்டம் 2: லண்டன் - வடகிழக்கு (NE LONDON):
இந்த தேர்தல் மாவட்டம் ENFIELD, WALTHAMSTOW, NEWHAM, BARKING, REDBRIDGE நகராட்சிகளை(Councils) உள்ளடக்கும்.
3) தேர்தல் மாவட்டம் 3: லண்டன் - தெற்கு (SOUTH LONDON):
இந்த தேர்தல் மாவட்டம் KINGDTON, MERTON, SUTTON, CROYDON, LEWISHAM, BROMLEY நகராட்சிகளை(Councils) உள்ளடக்கும்.
4) தேர்தல் மாவட்டம் 4: இங்கிலாந்து ENGLAND (லண்டன்தவிர்ந்த இடங்கள்) (OUTSIDE LONDON – OTHER CITIES)
5) தேர்தல் மாவட்டம் 5: ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்(SCOTLAND & WALES).
** பிரதிநிதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் தற்பொழுதுஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மனுதாரர்கள் அதற்குரியவிண்ணப்பப்படிவத்துடன், போட்டியிட தகமைவிண்ணப்பப்படிவத்தையும் சமர்ப்பிக்கவேண்டும். இதற்குரியதகவல், தேர்தல் நடைமுறை விதிகள், வேட்பு மனுக்கள் மற்றும்இதர விடயங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கான ஆணையஅலுவலகம், அதன் மின்னஞ்சல், இணையத்தளம் (WEBSITE) ஊடாக பெற்றுக்கொள்ளலாம். விவரங்கள் பின்வருமாறு:-
* அலுவலகம்: 227 PRESTON ROAD, WEMBLEY, HA9 8NF
* மின்னஞ்சல்: ecuk@tgte.org
* இணையத்தளம்: tgte.org
தேர்தலில் போட்டியிட தகமை பெற்றவர்கள் தேர்தலுக்கானவிண்ணப்பப் படிவத்தையும் கட்டுப் பணத்தையும் சித்திரை 10 ஆம் திகதிக்கு (10/04/2024) முன்னர் எமது லண்டன்பணிமனையில் நேரிலோ அல்லது தபால் மூலம் தேர்தல்ஆணையாளருக்கோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நன்றி,
கு. சிதம்பரப்பிள்ளை
தேர்தல் ஆணையாளர் - ஐக்கிய இராச்சியம்
K. Sithamparapillai
UK Election Commissioner for TGTE
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Instagram
